சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 79 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

0 3004

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 183 ஆக அதிகரித்துள்ளது.

அங்குள்ள விடுதியில் 66 மாணவர்கள் உட்பட 71 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, திங்கட்கிழமை 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, விடுதியில் இருந்த 539 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், மேலும் 79 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால், ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், காவலாளிகள், விடுதி பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments