குடிபோதையில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது எப்படி..? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிர்ச்சி

0 8672
சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில், குடிபோதையில், நரிக்குறவர் இன பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற காவலர், அன்றைய தினமே விடுவிக்கப்பட்டது, அதிர்ச்சி அளிப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, அந்த காவலருக்கு எவ்வாறு ஜாமீன் வழங்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.

தவறாக நடக்க முயன்ற நபருக்கு ஜாமீன் வழங்கிய வழக்கின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சங்கரன்கோவில் நீதித்துறை நடுவருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், சம்பவத்தன்று, சங்கரன்கோவில் பேருந்து நிலைய சிசிடிவி பதிவைத் தாக்கல் செய்ய தென்காசி எஸ்.பிக்கு ஆணையிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments