திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரம்

0 3325

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பக்தர்கள் வரிசையில் செல்வதற்கு வசதியாக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த கோவிலில் வருகிற 27-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், இலவச தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனத்திற்காக கோவிலின் 4 வீதிகளிலும் பக்தர்கள் வரிசையாக நடந்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பக்தர்களின் நலன் கருதி, சவுக்கு கட்டை மற்றும் தகரத்தால் நீண்ட நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments