அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 100 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

0 5682
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 100 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 100 கோடி மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படும் என்று மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் காணொலி காட்சி மூலம் பேசிய அவர், எதிர்வரும் 5 ஆண்டுகளில் 5 கோடி தொலைக்காட்சி பெட்டிகள், லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட 5 கோடி கணினி ஹார்ட்வேர் பொருட்கள் தயாரிக்கப்படும் என்றார்.

இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், விரைவில் 5ஜி தொழில்நுட்ப சேவைக்கான பரிசோதனை நடைபெறும் என்று கூறினார்.

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 5 ஆண்டுகளுக்குள் ஒரு லட்சம் கோடி டாலராக அதிகரிக்க வேண்டும் என்றும் பிரசாத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments