நாட்டிலேயே, மிகவும் குளிரான பகுதியாக மாறியது காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க்

0 3891
நாட்டிலேயே, மிகவும் குளிரான பகுதியாக, காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க் மாறியிருக்கிறது.

நாட்டிலேயே, மிகவும் குளிரான பகுதியாக, காஷ்மீர் மாநிலத்தின் குல்மார்க் மாறியிருக்கிறது.

அங்கு, இரவு நேரங்களில், மைனஸ் 10 புள்ளி 2 டிகிரி செல்சியசாக தட்ப வெப்பம் பதிவாகியிருக்கிறது. இதனால், திரும்பிய திசையெல்லாம், வெள்ளைக் கம்பளம் விரித்தாற்போல், உறைபனி சூழ்ந்து காணப்படுகிறது.

காஷ்மீரின் கோடைகால தலைநகராக அறியப்படும் ஸ்ரீநகரில், மைனஸ் 2 புள்ளி 6 டிகிரி செல்சியசும், குப்வாராவில் மைனஸ் 2 புள்ளி 3 செல்சியசும், உறைபனி தட்பவெப்பநிலை பதிவாகியுள்ளதாக, அம்மாநில வானிலை மையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் நாட்களில், கடும் உறைபனி குளிர்ச்சூழல் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments