7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

0 7246
7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, உயர்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சுதாகர், டிஜிபி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவின், எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழல் கண்காணிப்பு டிஜிபியாக, பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப சேவைகள் பிரிவு ஏடிஜிபியாக அமரேஷ் பூஜாரியும், அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக செந்தாமரைக் கண்ணனும் நியமிக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments