அர்மீனியா - அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே போர் கைதிகள் பரிமாற்றம்
அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே, ரஷ்யா முன்னிலையில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்து,
தற்போது இரு நாடுகளும் அனைத்து போர் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ள முன்வந்துள்ளன.
அதன் முதல் கட்டமாய், அஜர்பைஜான் சிறைகளில் இருந்த 44 அர்மீனியர்கள் விடுவிக்கப்பட்டு, ரஷ்ய போர் விமானம் மூலம் அர்மீனியா வந்தடைந்தனர்.
மீண்டும் அதே விமானத்தில், அர்மீனியர்களால் கைது செய்யப்பட்ட 12 அஜர்பைஜான் நாட்டினர் தாயகம் திரும்பினர்.
Comments