பனி படர்ந்த தெரு... 40 முறை வழுக்கி விழுந்த போதிலும் விடாமுயற்சியால் தெருவை கடந்த சிறுமி

0 3215

பனிப்பொழிவால் உறைந்த தெருவை கடக்க முயன்ற சிறுமி 40 முறை வழுக்கி விழுந்த காட்சி இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கீவ் நகரைச் சேர்ந்த 9 வயது பள்ளிச்சிறுமி மரியா மோசியாங்கோ கொப்லிட் ஆண்டிரிவ்ஸ்கை யுஸ்விஸ் தெருவில் நடந்து சென்றாள்.

அப்போது கடுமையான பனி காரணமாக தெருவை கடக்க முயற்சித்த போது அவள் வழுக்கி கிழே விழுந்தாள். உடனடியாக சுதாரித்துக்கொண்ட சிறுமி மீண்டும் எழுந்து தெருவை கடக்க முயற்சித்தாள். ஆனால், மீண்டும் வழுக்கி விழுந்தாள்.

மொத்தம் 40 முறை வழுக்கி விழுந்த போதிலும் விடாமுயற்சியால் இறுதியாக மரியா அந்த தெருவை கடந்து சென்றாள்.இந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments