காபுல் நகர துணை ஆளுநர் குண்டு வெடிப்பில் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த குண்டு வெடிப்பில், துணை ஆளுநர் Mohibullah Mohammadi கொல்லப்பட்டார்.
காலையில் பணிக்கு சென்ற போது, அவரது காரில் முன்கூட்டியே பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததால், அவரும், அவரது செயலாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அரசுக்கும், தாலிபான் பயங்கரவாதிகளுக்கும் கத்தாரில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கியது முதல், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
Comments