புதிய வேளாண் சட்டங்கள் - பிரதமர் விளக்கம்..!
கடந்த காலங்களில், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே, புதிய வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சியினர், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில், பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள கட்ச் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கம், தமது தலைமையிலான மத்திய அரசுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில், விவசாய சங்கங்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலேயே, புதிய வேளாண் திருத்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, தற்போது, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் கட்சிகள், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக, பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். வேளாண்மை சீர்திருத்தங்கள் தொடர்பாக, தங்களது ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சியினர், சிறுதுரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்றும் பிரதமர் புகார் தெரிவித்துள்ளார்.
தற்போது, வேளாண்மையில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டி, வரலாற்று சிறப்புமிக்க முடிவை தமது தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், அது ஏதோ ஆபத்து என்பது போன்றது எனக்கூறி, எதிர்க்கட்சியினர், விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாகவும், பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார்.
Comments