இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

0 1225
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 விசைப்படகுகளுடன் 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். அதுதொடர்பான காட்சிகளை மீனவர்கள் சிலர் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர்.

அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தங்களை விரட்டியடித்ததோடு, துப்பாக்கிமுனையில் கைது செய்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவோடு இரவாக மீன் பிடிக்காமல் கரை திரும்பியதால் பெரும் இழப்பு ஏற்பட்டடுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மீனவர்களையும் படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்கும் வரை தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். சுமார் 800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments