குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற கோரிய வழக்கு... பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
தமிழகத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விபரங்களை அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த பொதுநல வழக்கில் 2016 முதல் குடிமராமத்து பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மேற்கோள் காட்டிய மனுதாரர், போதுமான அளவுக்கு மழை பொழிந்துள்ள நிலையிலும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பவில்லை என சுட்டிக்காட்டினார்.
இதற்கு வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள் முறையாக தூர்வாரப்படாததே காரணம் என குற்றஞ்சாட்டிய மனுதாரர், குடிமராமத்து பணிகளின் அனைத்து விவரங்களையும் மாவட்ட இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கோரினார்.
Comments