ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு முடிவை மாற்றிக் கொண்ட ஊராட்சித் தலைவர்... பதவி இருக்கிறதா? இல்லையா? என குழப்பம்
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சித் தலைவர் சந்திரா ராஜினாமா கடிதம் அளித்துவிட்டு, சில நாட்கள் கழித்து முடிவை மாற்றிக் கொண்டதாக கூறியதால் அவர் பதவி குறித்து குழப்பம் நீடிக்கிறது.
அரியலூர் மாவட்டம் கண்டராதித்தம் ஊராட்சித் தலைவர் சந்திரா, ஊழல்களை சகிக்க முடியாமல் ராஜினாமா செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கிவிட்டு ஊராட்சி மன்ற தலைவர் நாற்காலியிலிருந்து மாறியும் அமர்ந்து கொண்டார்.
ஆனால் அவரே ஊராட்சி மன்ற தலைவராக தொடர வேண்டும் என துணைத் தலைவர் ஞானவேல் மற்றும் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரியை தொடர்புகொண்டு பணியை தொடர்வதாக ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தெரிவிக்க, அதுகுறித்து மாவட்ட ஆட்சியர்தான் முடிவெடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியுள்ளார்.
Comments