கேரளாவில் டெம்போ வேனால் விபத்தை ஏற்படுத்தி செய்தியாளர் கொலை? - பத்திரிகை சங்கங்கள் குற்றச்சாட்டு

0 2877

கேரளாவில் டெம்போ வேனால் விபத்து ஏற்படுத்தி செய்தியாளரை கொலை செய்ததாக கேரள பத்திரிகையாளர் சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

கேரள மாநிலத்தில் பல்வேறு சேனல்களில் செய்தியாளராக பணியாற்றியவர் பிரதீப். தற்போது , திருவனந்தபுரத்தில் இணையதள சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் தன் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் நேமம் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது, டெம்போ ஒன்று அவர் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், தூக்கி வீசப்பட்ட பிரதீப் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அந்த பகுதியில். கடையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது , டெம்போ வேன் செய்தியாளரை பின்தொடர்ந்தது சென்று மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்து போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. விபத்தை ஏற்படுத்திய வேன், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வாகனத்தின் பதிவு எண்ணும் தெரியவில்லை.

கேரள அரசுக்கு எதிராக தொடர்ந்து செய்திகளை பிரதீப் வெளியிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், பல முறை கொலை மிரட்டல் வந்ததாகவும் பிரதீப்பின் தாயார் கூறியுள்ளார். எனவே, பிரதீப்பை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக , டெம்போ ஓட்டுநரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் மற்றும் கேரள மாநில பத்திரிகையாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் தலைமையில் செய்தியாளர் பலி குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பலியான பிரதீப்புக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments