10 மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளில் இயல்பான பிரசவங்களை விட சிசேரியன் பிரசவமே கொடிகட்டி பறப்பதாக தகவல்
18 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 10 மாநிலங்களில், தனியார் மருத்துவமனைகளில் இயல்பான பிரசவங்களை விட சிசேரியன் பிரசவமே கொடிகட்டி பறப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2019-20 ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, இந்த 10 மாநிலங்களில். அதிகபட்சமாக மேற்கு வங்கத்திலும்,ஜம்மு காஷ்மீரிலும் தனியார் மருத்துமனைகளில் 83 சதவிகிதம் சிசேரியன் முறையில் பிரசவம் பார்க்கப்படுகிறது.
மாநிலங்கள் அடிப்படையிலான புள்ளி விவரங்களின்படி, தெலங்கானா 60 சதவிகித சிசேரியன்களுடன் நாட்டில் முதலிடத்தில் உள்ளது.
குறைந்த அளவாக குஜராத்தில் தனியார் மருத்துவமனைகளில் 31 சதவிகிதம் என்ற அளவுக்கு சிசேரியன் பிரசவங்கள் நடக்கின்றன.
Comments