மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனியார் பள்ளி மாணவியான பூஜா தாக்கல் செய்த மனுவில் நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத நிலையில், 200 மதிப்பெண்கள் கூட தாண்டாத அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாமற்றது என கூறியுள்ளார்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள்,அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் உள்ஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்காத தடை விதிக்க மறுத்துவிட்டனர். அதே சமயம் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Comments