சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல நாசா தேர்வு செய்துள்ள 3 வீரர்களில் இந்திய வம்சாவளியினரான ராஜா சாரிக்கு இடம்

0 9941
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல நாசா தேர்வு செய்துள்ள 3 வீரர்களில் இந்திய வம்சாவளியினரான ராஜா சாரிக்கு இடம்

அடுத்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல நாசா தேர்வு செய்துள்ள 3 விண்வெளி வீரர்களில் இந்திய வம்சாவளியினரான ராஜா சாரியும் இடம் பெற்றுள்ளார்.

அடுத்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாத வாக்கில் ஸ்பேஸ்எக்ஸ் குரூ-3 என்ற திட்டத்தின் படி இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளனர்.

ராஜா சாரி, அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றுகிறார். அவர் இந்த விண்வெளி பயணத் திட்டத்தின் கமாண்டராகவும் இருப்பார் என நாசா தெரிவித்துள்ளது.

2017 ல் நாசாவின் விண்வெளி வீரராக சேர்ந்த ராஜா சாரிக்கு இது முதலாவது விண்வெளி பயணமாகும்.

2500 மணி நேர பறக்கும் அனுபவம் கொண்ட ராஜா சாரிக்கு எதிர்காலத்தில் நாசா சார்பில் நிலவுக்கு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments