கங்கனாவுக்கு ஹிருத்திக் பெயரில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

0 1991
கங்கனாவுக்கு ஹிருத்திக் பெயரில் மின்னஞ்சல் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு மீதான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம்

ந்தி நடிகை கங்கனாவுக்கு தனது பெயரிலான போலி ஐ.டி.யிலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்கக்கோரி நடிகர் ஹிருத்திக் ரோசன் அளித்த புகார் மீதான விசாரணை, குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மும்பை போலீசிடம் இதுகுறித்து ஹிருத்திக் ரோசன் 2016ல் புகார் அளித்திருந்தார். அதில் அவர், தனது பெயரில் போலி ஐ.டி.யை உருவாக்கி கங்கனாவுக்கு 2014ம் ஆண்டு யாரோ மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

இதன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், 4 ஆண்டுகளாக முன்னேற்றமில்லாமல் இருந்தது. இந்நிலையில் ஹிருத்திக் வழக்கறிஞர் இம்மாத தொடக்கத்தில் இதுகுறித்து காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து விசாரணையை விரைவுபடுத்தும் வகையில், சைபர் கிரைம் பிரிவிலிருந்து காவல்துறை குற்ற புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments