ரூ. 7 கோடிக்கு சொத்து ...1.37 கோடி ரொக்கம் ... அத்தனையும் லஞ்சம்! - சிக்கிய சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்

0 7059

தமிழகம் முழுவதுமே பரவலாக அரசு அதிகாரிகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் சுற்றுச்சூழல் கண்காணிப்பாளர் வீட்டில் நடந்த சோதனையில் 1.37 கோடி ரொக்கம் மற்றும் 3 கிலோ தங்கம் 7 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சைதாபேட்டை பனகல் மாளிகையில் இயங்கி வரும் சுற்றுசூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பாண்டியன் என்பவர் பணியாற்றி வருகிறார். சுற்றுசூழல் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் பாண்டியன் மீது தொடர்ந்து லஞ்ச புகார் எழுந்து வந்தது. இதை தொடர்ந்து, பனகல் மாளிகையில் உள்ள பாண்டியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலக அறையில் நடத்தப்பட்ட சோதனையின் போது கணக்கில் வராத ரூ.88,500 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் அவரின் அலுவலக அறையிலும், வாகனத்திலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பாண்டியனின் வங்கிக்கணக்கில் ரூ. 38,66,220 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள பாண்டியன் வீட்டிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. பாண்டியன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வீட்டில் இருந்து ரூ. 1. 37 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு, 3.08 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 1.22 கோடி ஆகும். 3.343 கிலோ மதிப்புள்ள வெள்ளி கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. .51 லட்சம் ஆகும். அதோடு ரூ. 5.40 லட்சம் மதிப்புள்ள 10.52 கேரட் வைரங்களும் ரூ. 7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இது போக நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்கள் 37 லட்சத்துக்கு கைப்பற்றப்பட்டது. பாண்டியன் வீட்டிலிருந்த டொயாட்டோ ஏடியோஸ் கார் மற்றும் 3 டூ வீலர்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து இரண்டாவது நாளாக பாண்டியன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments