1971ஆம் ஆண்டு போரின் வீரர்களை கவுரவிக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 180 கி.மீ தூரம் தொடர் ஓட்டம்
இந்தியா - பாகிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 180 கிலோமீட்டர் தூரம் தொடர் ஓட்டப்பந்தயம் நடத்தினர்.
1971 டிசம்பர் 3 முதல் 16ஆம் தேதிவரை நடைபெற்ற இப்போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லையில் தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் 11 மணி நேரத்தில் அனுப்கரை வந்தடைந்தது.
Comments