397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கும் அபூர்வ நிகழ்வு..! வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே கோளாக தோன்றும் காட்சி...

0 5283
397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நடக்கும் அபூர்வ நிகழ்வு..! வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே கோளாக தோன்றும் காட்சி...

வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21-ந்தேதி ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன.

இந்த இரு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன. தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி வந்துகொண்டே இருக்கின்றன.

வருகிற 21-ந் தேதி மாலை 6 மணி அளவில் மேற்கு வானத்தில் அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரியில் பத்தில் ஒரு பங்காக குறைந்து 2 கோள்களும் நம்முடைய கண்களுக்கு நேர்கோட்டில் வருவதால் அவை ஒரே கோளாக காட்சி அளிக்க இருக்கின்றன. இதனை வெறும் கண்ணால் அனைவரும் பார்க்கலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments