ஓடும் பேருந்தின் படிக்கட்டில் இருந்து உருண்ட நடத்துனர்..! 5 கிலோ மீட்டர் கடந்து விழித்த ஓட்டுனர்

0 9801

ன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் ஓடும் பேருந்தின் படிக்கட்டில் இருந்து நடத்துனர் உருண்டு விழுந்த நிலையில், அது தெரியாமல் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டுனர் பேருந்தை இயக்கிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் ஒரு சிலர் மட்டுமே பயணித்தனர்.

பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும் அங்கே பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறிது தூரம் சென்ற போது, பேருந்தில் நடத்துனர் இல்லை என பயணிகள் தெரிவித்தனர். அதன் பின்பு தான் நடத்துனர் பேருந்தில் இல்லாதது ஓட்டுனருக்கு தெரியவந்தது.

இதையடுத்து பயணிகளை இறக்கிவிட்டு வந்த வழியே பேருந்தை திரும்பிச்சென்ற ஓட்டுனர், 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூப்பந்தல் அருகே சென்றபோது அங்கு தான் நடத்துனர் மகாலிங்கம் தவறி கீழே விழுந்திருப்பது தெரியவந்தது.

முன்னதாக அந்த வழியாக சென்றபோது பேருந்தின் படிக்கட்டில் நின்றிருந்த நடத்துனர் மகாலிங்கம், நிலை தடுமாறி கீழே உருண்டு விழுந்தது தெரியவந்தது. இதனை கவனிக்கத் தவறிய ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதனிடையே கீழே விழுந்து காயம் அடைந்த நடத்துனரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததும் ஓட்டுனருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பேருந்தை ஓட்டுனர் டெப்போவுக்கு கொண்டு சென்று விட்டு விட்டு நடத்துனரின் நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

நடத்துனர் கீழே விழுந்ததும் தெரியாமல் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்றது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments