ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்V 91.4 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தகவல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 91 புள்ளி 4 சதவீதம் சிறப்பாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில், இந்த தடுப்பூசி ஏற்கனவே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டாலும், போதிய அளவு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என பல புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், தடுப்பூசியை 22,714 பேருக்கு செலுத்தி 21 நாட்கள் கண்காணித்ததில், 91 புள்ளி 4 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதாக, ஸ்புட்னிக் வி - தடுப்பு மருந்துக்கான அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: The #SputnikV vaccine’s efficacy is confirmed at 91.4% based on data analysis of the final control point of clinical trials. https://t.co/E9j1wk2YZT #covidvaccine #coronavirus #COVID19
— Sputnik V (@sputnikvaccine) December 14, 2020
Comments