ஆப்பிரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி : போக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

0 1283
ஆப்பிரிக்க நாடான நைஜரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி : போக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

ஆப்பிரிக்க நாடான நைஜரில் 27 பேர் கொல்லப்பட்டதற்கு போக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

நைஜர் நகருக்கு அருகே டிஃபா என்ற மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று புகுந்த ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு போக்கோ ஹராம் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

அந்த இயக்கம் சார்பில் சுமார் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய  வீடியோவை அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments