பிரேசிலில் ஆற்றுப் பகுதியில் பிறந்த 92,000 ஆமைக் குஞ்சுகள்
பிரேசில் நாட்டின் அமேசான் நதியின் துணை ஆறான புரூஸ் ஆற்றின் கரையோர பகுதிகளில் 92ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக் குஞ்சுகள் பிறந்தன.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆற்று மணலில் அழகாக செல்லும் இந்த ஆமைக் குஞ்சுகளின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நாளில் 71ஆயிரம் ஆமைக்குஞ்சுகளும் அதற்கு அடுத்த சில நாட்களில் 21ஆயிரம் ஆமைக்குஞ்சுகளும் பிறந்த தாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வகை ஆமைக்குஞ்சுகள் முட்டைகள் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
பொதுவாக இந்த வகை ஆமைகள் மூன்றரை அடி நீளமும், 200 பவுண்டு எடையும் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments