அமெரிக்காவில் போடப்பட்டது முதல் கொரோனா தடுப்பூசி... அதிபர் டொனால்ட் டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி முதன்முறையாக போடப்பட்டுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவுக்கும், உலகிற்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்காவிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கோடை காலத்திற்குள் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
Comments