அதிகப்படியான மீன்பிடித்தலை 2020க்குள் நிறுத்த இலக்கு... உலக வர்த்தக அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
அதிகப்படியான மீன்பிடித்தலை தடுப்பதற்கு உடன்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக, உலக வர்த்தக அமைப்பு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
மீன்வளத்தைப் பாதுகாக்கும் விதமாக, அளவுக்கு அதிகமாக மீன்பிடிப்பதை தடுக்க, அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மானியம் வழங்குவதை 2020 ஆம் ஆண்டுக்குள் நிறுத்த வேண்டும் என்று 2015 ஆம் ஆண்டு ஐ.நா. இலக்கு நிர்ணயித்தது.
சீனா, தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளே முக்கிய மானியதாரர்களாக உள்ள நிலையில், இது தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் உலக வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
Comments