ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம்

0 3942
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை விரைவுபடுத்தவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கவும், தொகுதி வாரியாகக் கள நிலவரத்துக்கு ஏற்றாற்போல் பிரச்சார உத்திகளை வகுக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments