இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள அதி நவீன 17-ஏ பிரிகேட் போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ பிரிகேட்ஸ் ஏவுகணை தாங்கி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலை, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், முப்படை தலைமை தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் துவக்கி வைத்தார்.
19 ஆயிரத்து 293 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 3 பிரிகேட் கப்பல்களை கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.நவீன எஞ்சின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல் மணிக்கு 28 கிலோநாட் வேகத்தில் பயணிக்கும்.
வான், கடல் மற்றும் ஆழ்கடலில் இருந்து வரும் முக்கோண அச்சுறுத்தல்களை சமாளிக்க திறன் வாய்ந்த ஆயுதங்களும், சென்சர்களும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,இனி வரவுள்ள மேலும் 2 பிரிகேட் கப்பல்களும் சேர்ந்து கடல்சார் பாதுகாப்பில் இந்தியாவுக்கு தன்னிறைவை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
Comments