வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும்-தேசிய வானிலை ஆய்வு மையம்

0 1911
வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பகல் நேரத்தில் குளிர் மேலும் அதிகரிக்குமென கூறப்பட்டுள்ளது.

ஜம்மு, உத்ரகாண்ட், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மேகாலாயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை 37.4 டிகிரி பாரன்ஹீட் முதல் 41 டிகிரி பாரன்ஹீட்டாக வரை இருக்கும் என்றும், இதனால் கடும் குளிர் நிலவும் என்றும், நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments