மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பதாக, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

0 7171

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் ஆதரிப்பதாக, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. 

அந்த குழுவில் இணைந்துள்ள தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 10 விவசாய அமைப்புகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும், சட்டங்களின் உட்பிரிவின்படி விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் நரேந்திரசிங் தோமர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments