நடிகை சித்ராவின் உறவினர்களிடம் விசாரணை

0 3967
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். 

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா, ஹேம்நாத் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.

விரைவில் இவர்களுக்கு முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில்,கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்ட நிலையில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.

திருமணமாகி சில மாதங்களில் அவர் மரணமடைந்துவிட்டதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ இன்று விசாரணையை துவங்கினார்‍.

இதற்காக நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, அண்ணன் சரவணன்,சகோதரி சரஸ்வதி ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராயினர்‍. ஒரே அறையில் அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

3 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த விசாரணையில் சித்ராவின் திருமணம், வரதட்சணை தொடர்பான கேள்விகளை கேட்டு ஆர்டிஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்‍. இதனிடையே சித்ராவின் மரணம் தொடர்பான விசாரணையில் நம்பிக்கை இருப்பதாகவும், உரிய நீதி கிடைக்கும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தன்னால் மகளுக்கு எந்த வித மன உளைச்சலும், ஏற்படவில்லை என சித்ராவின் தாயார் விஜயா கூறியுள்ளார். சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் நாளை விசாரணை நடத்துகிறார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments