இன்று இரவு நிகழும் 2020ம் ஆண்டின் 2ஆவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என தகவல்
2020ம் ஆண்டில் கடைசி சூரிய கிரகணம், வானில் இன்று இரவு 7 மணிக்கு நிகழ இருப்பதாகவும் ஆனால் இந்தியாவில் அது தெரியாது எனவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது.
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலவு என மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்றைய கிரகணம் சிலி, அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் முழுவதுமாகவும், தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதியளவும் தெரியும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் கூறியுள்ளது.
இதேபோல் ஜெமினைட்ஸ் எனப்படும் எரிகற்கள் பொலிவும் இன்றிரவு நிகழ இருப்பதாகவும், இதனால் பூமிக்கு பாதிப்பு இருக்காது எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
Comments