குற்றால அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தனிநபர் இடைவெளி கடைபிடித்து குற்றால அருவிகளில் குளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிக்கும் போது கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றனவா என்பதை கண்காணிக்க ஒவ்வொரு அருவிக்கும் பிரத்யேக குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றால அருவிகளில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி #Tenkasi | #Courtallam | #Falls https://t.co/qsjLRLrr8F
— Polimer News (@polimernews) December 14, 2020
Comments