சவுக்கார்பேட்டையில் கணவர், மாமனார், மாமியார் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவி உள்ளிட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

0 2555

சென்னை சவுக்கார்பேட்டையில் கணவர், மாமனார் மற்றும் மாமியாரை சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்ட மருமகள் உள்ளிட்ட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பைனான்சியர் தலில்சந்த், அவருடைய மனைவி புஷ்பா பாய்,   மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில்,  ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவும், அவரின் 2 சகோதரர்கள் உள்ளிட்ட 6 உறவினர்கள் கொலை செய்துவிட்டு   வட மாநிலத்திற்கு தப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 6  பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், விரைவில்  காவலில் எடுத்து  வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 6 பேரும் ஜாமீனில் வருவதை தடுக்கவும், ஒரு வருடம் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கவும்  குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் வைக்க  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments