விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ம் தேதி உண்ணாநிலை போராட்டம் - திமுக கூட்டணி

0 2267
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ம் தேதி உண்ணாநிலை போராட்டம் - திமுக கூட்டணி

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாநிலை போராட்டம் நடத்தப்படும் என்று திமுக கூட்டணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை அவமதித்திடும் வகையில் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியிருப்பதற்கும், மத்திய அமைச்சர்கள் பலரும் பத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

வள்ளுவர் கோட்டத்தில் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கூட்டணி கட்சித் தலைவர்களும் - எம்பி, எம்எல்ஏக்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments