சித்ராவின் உறவினர்களிடம் ஆர்டிஓ விசாரணை
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா,ஹேம்நாத் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்.
விரைவில் இவர்களுக்கு முறைப்படி திருமணம் நடைபெறவிருந்த நிலையில்,கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்ட நிலையில் சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.
திருமணமாகி சில மாதங்களில் அவர் மரணமடைந்துவிட்டதால், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ இன்று விசாரணையை துவங்கியிருக்கிறார்.
இதற்காக நடிகை சித்ராவின் தந்தை காமராஜ், தாயார் விஜயா, அண்ணன் சரவணன்,சகோதரி சரஸ்வதி ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராயினர். அவர்களிடம் சித்ராவின் திருமணம்,வரதட்சணை தொடர்பான கேள்விகளை கேட்டு அவர் விசாரணை நடத்தினார். சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் உறவினர்களிடம் அவர் நாளை விசாரணை நடத்துகிறார்.
Comments