அக்காவை கொலை செய்து விட்டு நாடகம் : தங்கை கைது

0 13994
சென்னையை அடுத்த மாங்காட்டில், கணவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, உடன்பிறந்த அக்காவையே கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த மாங்காட்டில், கணவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி, உடன்பிறந்த அக்காவையே கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தங்கையை போலீசார் கைது செய்தனர். 

மாங்காடு போலீஸ் நிலையத்தில் லட்சுமி என்பவர் நேற்று புகார் ஒன்றை அளித்திருந்தார். குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் தனது வாயில் மதுபானத்தை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும் அதற்கு காரணம் தனது அக்கா தெய்வானை என்றும் அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அதிகாலையில் அக்கா தெய்வானை வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்ததாக போலீசாருக்கு லட்சுமியே தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் லட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில ஆண்டுகளாக துபாயில் கணவருடன் தங்கி வேலைபார்த்து வந்த தெய்வானை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து திரும்பியதும், லட்சுமியின் கணவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததால், அவர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அக்கா தெய்வானையின் தயவில் வாழ்ந்துவந்த நிலையில் திடீரென வெளியேற்றப்பட்டதால் லட்சுமியும், அவரது கணவரும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இதுதவிர, தெய்வானை ரமேஷின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு, குடிப்பழக்கம் உள்ள ரமேசுக்கு சொத்து எதையும் தரவேண்டாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த தெய்வானையின் வாயை லட்சுமி பொத்திக் கொள்ள, ரமேஷ் கத்தியால் தெய்வானையை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். லட்சுமியை கைது செய்த போலீசார்,  தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேசை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments