ஒரு காலத்தில் தமிழர்கள் பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தனர் : தற்போது யாரும் விண்ணப்பிப்பது கூட இல்லை - மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்தம்

0 2909

ரு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த நிலையில், தற்போது அந்த தேர்வுகளுக்கு தமிழர்கள் பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த  நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர், தமிழக அரசின் வேலை வாய்ப்புகளுக்கு, தமிழகத்தை சேர்ந்தோர் விண்ணப்பிப்பது இல்லை என்றனர்.

பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவுக்கும், மதுவுக்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கிவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள் அரசின் வேலை வாய்ப்புகள், அதற்கான பயிற்சிகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் எனக் கூறினர்.

அரசு மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி மையங்களை அமைக்கலாம் எனக் கூறி,தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments