2021 - 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு : தொழிலதிபர்களுடன் நிதியமைச்சர் கலந்துரையாடல்

0 1117
2021 - 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு : தொழிலதிபர்களுடன் நிதியமைச்சர் கலந்துரையாடல்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 - 2022 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாகப் பெருந்தொழிலதிபர்களுடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளார்.

மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும்போது தொழில்துறையினர், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்பது வழக்கம்.

அதன்படி அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கு முந்தைய கலந்துரையாடலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலியில் தொடங்கியுள்ளார்.

பெரு நிறுவனங்களுக்கான வரி விதிப்பு, வரிச்சலுகை, உற்பத்தி ஊக்கச் சலுகைகள் ஆகியன குறித்துத் தங்கள் கருத்துக்களை அமைச்சரிடம் எடுத்துரைத்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments