நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து கலந்தாய்வில் பங்கேற்ற விவகாரம் : மாணவி, அவரது தந்தைக்கு போலீசார் வலைவீச்சு

0 2676
நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து கலந்தாய்வில் பங்கேற்ற விவகாரம் : மாணவி, அவரது தந்தைக்கு போலீசார் வலைவீச்சு

நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மாணவி, அவரது தந்தையை போலீசார் தேடுகின்றனர்.

27 மதிப்பெண் மட்டுமே பெற்றநிலையில் 610 மதிப்பெண் பெற்ற ஹிரித்திகா என்னும் மாணவியின் சான்றிதழை போலியாக தயாரித்து அளித்து பரமக்குடி மாணவி தீக்சா கலந்தாய்வில் கலந்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

புகாரின்பேரில் தீக்சா, தந்தையான பல்மருத்துவர் பாலச்சந்திரன் விசாரணையில் ஆஜராகக்கோரி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில் அதற்கு பதில் இல்லாததால், அவர்களையும், போலியாக சான்று தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளரையும் போலீசார் தேடுகின்றனர்.

மதிப்பெண் சான்றிதழை தடயவியல் துறைக்கு அனுப்பி உண்மை தன்மை குறித்து சோதனை மேற்கொள்ளவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments