டிசம்பர் 16 முதல் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வுத் துறை

0 6250
டிசம்பர் 16 முதல் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 16 முதல் மூன்று நாட்கள் கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments