விலை அதிகமாக இருப்பதால் ஃபைசர் தடுப்பூசியை இந்தியா வாங்க வாய்ப்பில்லை ? என தகவல்
அதிகமான விலை மற்றும் மைனஸ் 70 டிகிரியில் வைக்க வேண்டிய நிலை ஆகியவற்றால் ஃபைசரின் கொரோனா தடுப்பூசியை இந்தியா வாங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 நாடுகளில் அவசரகால அனுமதிக்கான ஒப்புதலை பெற்றுள்ள இந்த தடுப்பூசியை இந்தியா வாங்க வேண்டுமானால் ஊசி ஒன்றுக்கு 2,728 ரூபாய் கொடுக்க வேண்டும். அதே நேரம் இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனத்தால் உருவாக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை 737 ரூபாய் மட்டுமே.
அரசுகள் வாயிலாக மட்டுமே அந்தந்த நாடுகளுக்கு தடுப்பூசியை விற்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, குறைந்த விலைக்கு உள்நாட்டு தயாரிப்பு கிடைக்கும் நிலையில், அதிக விலை உள்ள ஃபைசரின் தடுப்பூசி இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
விலை அதிகமாக இருப்பதால் ஃபைசர் தடுப்பூசியை இந்தியா வாங்க வாய்ப்பில்லை ? என தகவல் | #Pfizervaccine | #COVID19 | #Covishield | #vaccinecost https://t.co/ndQKUnSQ0s
— Polimer News (@polimernews) December 14, 2020
Comments