விஸ்ட்ரான் ஐபோன் தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் வன்முறையில் ரூ 438 கோடி மதிப்புடைய பொருட்கள் சேதம்
கர்நாடகத்தில் ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலையில் வன்முறையில் 438 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் நரசபுராவில் உள்ள தொழிற்பேட்டையில் தைவான் நாட்டைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐபோன் தொழிற்சாலை உள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒப்புக்கொண்டதைவிடக் குறைவான தொகை ஊதியம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இரும்புக் கம்பிகளால் அலுவலகப் பொருட்களையும் வாகனங்களையும் சேதப்படுத்தினர். மின்னணு சாதனங்கள், கணினிகள், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
வன்முறையில் 438 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 128 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Comments