அமெரிக்காவில் மீண்டும் பற்றி எரியும் புதர்த் தீ

0 1565
அமெரிக்காவில் மீண்டும் பற்றி எரியும் புதர்த் தீ

அமெரிக்காவில் மீண்டும் ஏற்பட்டுள்ள புதர் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சான்டர்சன் மற்றும் பியூமவுண்ட் உள்ளிட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனால் புதர்கள் மட்டுமின்றி மரங்களும் எரிந்துவருகின்றன.

காற்றின் வேகம் காரணமாகவும், வறண்ட வானிலை நிலவுவதாலும் தீ பரவும் வேகம் அதிகமாக உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொளுந்து விட்டு எரியும் நெருப்பை அணைக்கும் பணியில் தரையிலிருந்து வாகனங்களும் வானத்தில் இருந்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments