சித்ரா, பெரியதிரையில் முதலும் கடைசியுமாக நடித்த திரைப்படம்... படத்தை பார்க்காமலேயே இறந்ததால் படக்குழுவினர் வேதனை

0 6955

சின்னத்திரை நடிகை சித்ரா பெரிய திரையிலும் ஒரு படத்தில் நடித்திருந்தார். கால்ஸ் என்ற அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே, சித்ரா இறந்து போனது படக்குழுவினரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா டிசம்பர் 9 - ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் இறப்பில் உள்ள மர்மம் இன்னும் தீரவில்லை. சித்ரா , தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், கணவர் ஹேம்நாத்திடத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னத்திரையில் பாண்டியன்ஸ் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்ட சித்ரா , பெரியதிரையிலும் முதன் முதலாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.

கால்ஸ் என்ற அந்த படத்தில் சித்ராவுக்கும் காதநாயாகியாகவே நடித்தார். கடந்த ஜூலை மாதத்தில் படத்தை திரையிட கால்ஸ் படத்தின் இயக்குநர் சபரீஷ் திட்டமிட்டிருந்தார். தனக்குரிய அனைத்து காட்சிகளிலும் சித்ரா நடித்தும் கொடுத்து விட்டார். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக, தொழில்நுட்ப பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், 6 மாதங்கள் கழித்து கால்ஸ் படம் வெளியாகவுள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் டிசம்பர் 13 - ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

த்ரில்லர் மூவியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி மாதம் 1 - ஆம் தேதி கால்ஸ் படத்தின் டிரைலர் வெளிவருகிறது. இந்த படத்தில் சித்ராவுடன் இணைந்து சவுந்தரராஜன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, வினோதினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தான் முதலும் கடைசியுமாக நடித்த திரைப்படத்தை திரையில் காணாமலேயே சித்ரா மரணமடைந்து போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments