உணவக உரிமையாளரை மிரட்டிய போலி நிருபர்..!
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உணவக உரிமையாளரை போலி நிருபர் ஒருவர் பணம் கேட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தனியார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு அதில், புகையிலை பாக்கெட் இருப்பதாகவும், அது குறித்து செய்தி வெளியிடாமல் இருக்க ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த நபர் தனது பாக்கெட்டில் இருந்து புகையிலை பாக்கெட்டை பிரியாணியில் போட்டது தெரியவந்தது.
Comments