சீக்கியர்களுக்காக மோடி அரசின் திட்டங்கள் தொடர்பான புத்தகம் : 5 நாட்களில் 2 கோடி பேருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய ஐஆர்சிடிசி

0 1290
சீக்கியர்களுக்காக மோடி அரசின் திட்டங்கள் தொடர்பான புத்தகம் : 5 நாட்களில் 2 கோடி பேருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய ஐஆர்சிடிசி

சீக்கிய சமூகத்தினரை கவருவதற்காக மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டதாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து  ஐஆர்சிடிசி விளக்கமளித்துள்ளது. 

சீக்கியர்கள் உடனான பிரதமர் மோடியின் சிறப்பான உறவு’ என்ற புத்தகத்தை, ரயில்வே துறையின் அங்கமான ஐஆர்சிடிசி 5 நாட்களில் 2 கோடி வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது.

போராட்டம் நடத்திவரும் சீக்கிய விவசாயிகளை சமாதானப்படுத்த ஐஆர்சிடிசி மூலம் மத்திய அரசு  இந்த முயற்சியை மேற்கொண்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஐஆர்சிடிசி, குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டும்  மின்னஞ்சல் அனுப்பப்படவில்லை எனவும், அனைத்து தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 

மின்னஞ்சல் அனுப்பப்படுவது இது முதல்முறை அல்ல , அரசு நலத்திட்டங்களை விளம்பரபடுத்தும் வகையில் பொதுநலனுக்காக இதுபோல பலமுறை அனுப்பப்பட்டுள்ளது என ஐஆர்சிடிசி கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments