மும்பைத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவின் ஜாமீன் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரிப்பு

0 866
மும்பைத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவின் ஜாமீன் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரிப்பு

மும்பைத் தாக்குதல் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட தஹாவூர் ராணா-வின் ஜாமீன் மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அவனை வெளியே விட்டால் ஆபத்து இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சலஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் ராணாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா அறிவித்துள்ளதால், அவனை நாடு கடத்தி அழைத்துவரும் பணியில் தேசியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக தம்மை சிறையில் இருந்து விடுவிக்கும்படி கோரிய ராணாவின் மனுவை நிராகரித்த நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments