8 மாதங்களுக்குப்பின் மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் இன்று மீண்டும் திறப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுக் கிடந்த மாமல்லபுரம் சுற்றுலாத் தலம், இன்று மீண்டும் திறக்கப்படுகிறது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிக்கப்படும் கடற்கரைக் கோயில் , ஐந்து ரதம் , அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டைக் கல் மற்றும் புலிக்குகை ஆகிய பகுதிகளை, இனி சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க முடியும்.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நாளொன்றுக்கு 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நுழைவுச்சீட்டுக்கு பதிலாக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுமாறு, சுற்றுலாப் பயணிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
Comments